காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல் இருக்க வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோள் செவிசாய்க்கப்பட்டு அதன்படி மக்கள் நடந்து வருகின்றனர் இந்த நிலையில் ஏற்கனவே இன்றைய தேதியில் நடப்பதாக நிச்சயம் செய்த பல திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஒரு சில திருமணங்கள் மட்டும் திட்டமிட்டபடி நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது
அந்த வகையில் விருத்தாச்சலம் அருகே ஒரு ஜோடிக்கு இன்று திருமணம் கோவிலில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இன்று சுய ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவில்கள் மூடப்பட்டதால் திருமணத்தை இன்னொரு நாளில் வைத்துக் கொள்ளுங்கள் என கோவில் நிர்வாகிகள் அறிவுறுத்தினர். ஆனால் மணமக்களும், மணமக்களின் உறவினர்களும் இன்று திருமணம் நடத்தியே தீரவேண்டும் என்று முடிவு செய்து அந்த கோவிலுக்கு முன் சாலையிலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். நடுரோட்டில் நின்று மணமகளுக்கு மணமகன் தாலி கட்டியதும் சுற்றியிருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தும் வித்தியாசமானதாக இருந்தது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது