டியூசனுக்கு சென்ற மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை!

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2017 (11:40 IST)
பஞ்சாப்பில் டியூசனுக்கு சென்ற 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை ஆசிரியர் ஒருவர் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.


 
 
கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பன்கஜ் அரோரா என்ற 40 வயது ஆசிரியரிடம் ஒரு மாணவி டியூசனுக்கு சென்றுள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள சிறுவர், சிறுமியர் பலருக்கும் மாலை நேர வகுப்பு எடுத்து வந்தார்.
 
இந்நிலையில் அவர் மாணவி ஒருவரை அவரது வீட்டில் வைத்து கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளார். இதனையடுத்து அந்த வீடியோவை காட்டி மாணவியை அடிக்கடி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
 
இதனை பொறுக்க முடியாத மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியதை அடுத்து அவர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் பன்கஜ் அரோரா மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
 
இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் பன்கஜ் அரோராவுக்கு 3.5 லட்சம் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்