இடிந்து விழுந்த புதிய மேம்பாலம்..! தரமற்ற முறையில் கட்டியதாக புகார்..!!

Senthil Velan

செவ்வாய், 18 ஜூன் 2024 (21:40 IST)
பீகாரில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலம் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ளே ஆற்றின் குறுக்கே 7 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டது. அந்த பகுதியில் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்து வந்த மக்களுக்காக இந்த மேம்பாலம் கட்டப்பட்டது.
 
இன்னும் சில நாட்களில் திறப்பு விழா நடைபெற இருந்த நிலையில்  திடீரென மேம்பாலம் இடிந்து விழுந்தது.   தரமற்ற முறையில் பாலம் கட்டப்பட்டுள்ளதால் இடிந்து விழுந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

ALSO READ: பெண்ணின் உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்.! 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்..!!
 
பாலம் இடிந்து விழுந்த நேரத்தில் அந்த பகுதியில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் நிகழவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேம்பாலம் சரிந்து விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்