நெருப்பு வைத்து முடி வெட்டும் பாகிஸ்தானியர்: வைரல் வீடியோ!!

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2017 (10:54 IST)
ஷஃபாத் ராஜ்புத் முடிவெட்டும் உத்தியை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட, உலகம் முழுவதும் ஒரே இரவில் பிரபலமாகிவிட்டார். 


 
 
நெருப்பை வைத்து முடி வெட்டும் கலையைச் செய்துவருகிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷஃபாத் ராஜ்புத் என்ற சிகை அலங்காரக் கலைஞர். 
 
எரியக்கூடிய ஒருவித துகள்களையும் திரவத்தையும் தலையில் தடவுகிறார். திடீரென்று தலையில் தீப்பற்றி எரிகிறது. கத்திரியையும் சீப்பையும் வைத்து மிக வேகமாக முடிகளை வெட்டி விடுகிறார்.
 
வாடிக்கையாளர் வெளியிட்ட இந்த வீடியோவை பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். பலர் ஷஃபாத்தின் திறமையைக் கண்டு ஆச்சரியமடைந்து, பாராட்டியிருக்கிறார்கள். 
 
சிலர், எத்தனையோ நவீன வழிகள் இருக்கும்போது தலையில் தீவைத்து முடிவெட்ட வேண்டிய அவசியம் என்ன? என்றும் இதை எதிர்த்து விமர்சனங்கள் வருகிறது.
 
அடுத்த கட்டுரையில்