இலவச படிப்பகம்,குருதி கொடை முகாம்,சாலையோர மக்களுக்கு குளிர் கால போர்வை மற்றும் உணவு வழங்குவது போன்ற மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந் நிலையில் தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலம் கோவை சுந்தராபுரம் கோண்டி காலனி எனும் பகுதியில் ஒரு பயனாளிகளுக்கு வீடு கட்டி கொடுத்து,அரிசி, மளிகை என வீட்டு உபயோகப்பொருட்களையும் வழங்கியுள்ளனர்.
மாற்றுத்திறனாளி குழந்தையை வைத்துள்ள அந்த குடும்பத்தினருக்கு சரியான ஒரு இடம் இல்லாததால் தவித்து வந்த நிலையில், களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த,தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு,உடனடியாக தனது நிர்வாகிகள் உதவியுடன் சுமார் ஒன்றரை இலட்சம் மதீப்பீட்டில் இலவச வீட்டை வழங்கியுள்ளனர்.