தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு .. அரசுக்கு உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

Siva

செவ்வாய், 18 ஜூன் 2024 (19:42 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சுட்டிக்காட்டிய அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
 
இறுதி அறிக்கை நிராகரிக்கப்பட்டதால், கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஒருவர் புதிய வழக்கை தாக்கல் செய்தார் 
 
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது என்றும் தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார் 
 
இதனை அடுத்து மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை ஜூலை ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்