சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு பன்றி காய்ச்சல் : தலைமை நீதிபதி ஆலோசனை !

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (13:42 IST)
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு பன்றிக்காய்ச்சல் பரவலாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர், ஹெச்1 என் 1 வைரஸ்களை உருவாக்கும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உச்ச நீதிமன்ற நீதிதிபதிகளான சதானந்தாகவுடா, இந்திராபானர்ஜி, நாகேஸ்வர ராவ், போபண்ணா, ஹேமந்த் குப்தா, ரிகேஷ் ராய் ஆகிய 6 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
எனவே, உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கு உரிய மருத்துவ பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று தலைமை நீதிபதியிடம் நீதிபதி சந்திரசூட் என்பவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இந்நிலையில் இது குறித்து ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில்,  உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஊழியர்களின் மருத்துவ பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக வழக்கறிஞர் சங்கங்களுடன் தலைமை நீதிபதி அவசர ஆலோசனை செய்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்