சிறுமியின் திருமணம் செல்லும் – நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு !

திங்கள், 10 பிப்ரவரி 2020 (08:19 IST)
ஹூமா வழக்கில் போராடும் மக்கள்

பாகிஸ்தானில் உள்ள 14 வயது சிறுமி ஒருவரின் திருமணம் செல்லும் என நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த தம்பதிகளான யூனிஸ் மற்றும் நஹினா ஆகியோரின் மகள் ஹூமா யூனிஸ். இந்நிலையில் சிறுமி ஹூமா,அப்துல் ஜாபர் என்ற நபரைக் காதலிக்க ஆரம்பித்துள்ளார். இதையறிந்த ஹூமாவின் பெற்றோர் சிறுமிக்கு அறிவுரை சொல்லி திருத்தப் பார்த்துள்ளனர். இதனால் அப்துல் ஜாபர், ஹூமாவைக் கட்டாயமாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதை எதிர்த்து ஹூமாவின் பெற்றோர் நீதிமன்றத்துக்கு சென்றனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிர்ச்சியான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளனர். அந்த தீர்ப்பில் ‘இஸ்லாமிய ஷரியத்தின் படி 14 வயது நிரம்பிய பெண்ணுக்கு திருமணம் செய்யும் உரிமை உண்டு. மேலும் ஒரு பெண் தன்னுடைய முதல் மாதவிடாய் சுழற்சியை முடித்திருந்தாலே அவரது திருமணத்துக்குத் தடை  இல்லை’ எனக் கூறியுள்ளது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இப்போது உச்சநீதிமன்றத்தை பள்ளியில் அளிக்கப்பட்ட சான்றிதழ்களை வைத்து வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்