ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

Siva
திங்கள், 20 மே 2024 (15:42 IST)
ஆம் ஆத்மி பெண் எம்பி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் மீது குற்றச்சாட்டு கூறிய நிலையில் தற்போது அவர் பாஜகவில் இளைய இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆம் ஆத்மி பெண் எம்எல்ஏ ஸ்வாதி மாலிவால்  என்பவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் தன்னை தாக்கியதாகவும் கன்னத்தில் அறைந்ததாகவும் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்

இந்த புகாரின் அடிப்படையில் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மீது அவர் விசாரணை காவலில் எடுக்கப்பட்டுள்ளார். இது குறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில் திடீரென ஸ்வாதி மாலிவால் பாஜகவில் இணையப் போவதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜே பி நட்டா ’ஸ்வாதி மாலிவால்  யார் என்று எனக்கு தெரியாது, அவரை நான் இதுவரை பார்த்தது கூட கிடையாது, அவர் பாஜகவில் இணைவதாக எந்த ஒரு தகவலும் வரவில்லை, ஒருவேளை அவர் பாஜகவில் சேர விரும்பினால் அப்போது பார்க்கலாம், அவர் மனதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்

ஆனால் அதே நேரத்தில் ஜேபி நட்டாவுடன் ஸ்வாதி மாலிவால்  ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்