ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளரால் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரின் முதல் தகவலை அறிக்கையில், நான் கெஜ்ரிவாலை நான் சந்திக்க சென்ற போது அவரது உதவியாளர் பிபவ் குமார் ஏழெட்டு முறை என்னை சரமாரியாக அறைந்தார். என்னை விட்டு விடுமாறு கெஞ்சியும் நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் பிபவ் குமார் எட்டி உதைத்தார்.
இந்த நிலையில் எனது விவகாரத்தை பாஜகவினர் அரசியலாக்க வேண்டாம் என ஸ்வாதி மாலிவால் கேட்டு கொண்ட நிலையிலும் ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை பெண் எம்பி மீது தாக்குதல் நடத்திய கட்சி நிர்வாகி மீது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.