பெகாசஸ் வழக்கில் நாளை தீர்ப்பு!!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (14:52 IST)
பெகாசஸ் மென்பொருள் மூலம் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். 

 
பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் செல்பேசி மூலம் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சுயாதீன விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட பல மனுக்கள் மீதான உத்தரவை வரும் நாளை (புதன்கிழமை) இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
 
இஸ்ரேல் நாட்டிலுள்ள என்.எஸ்.ஓ எனும் நிறுவனத்தின் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் மூலம் உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் தனி நபர்கள் வேவு பார்க்கப்பட்டனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
 
இந்தியாவில் த வைரஸ் இணையதளம் அவர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. நாடுகளின் அரசுகளின் ஓர் அங்கமாக இருக்கும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கே தங்கள் மென்பொருள் விற்கப்படுவதாக என்.எஸ்.ஓ கூறியிருந்தது. ஆனால், அப்படி யாரும் வேவு பார்க்கப்படவில்லை என்று இந்திய அரசு மறுத்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்