ஒரு வழியாக நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சரின் மகன்!

சனி, 9 அக்டோபர் 2021 (15:09 IST)
லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் பாஜகவினர் கார் விவசாயிகள் மீது மோதிய சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இருவரை உத்தரபிரதேச காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து இன்று விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம் ”கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ராவை இன்னமும் கைது செய்யாமல் தயவு செய்து வாருங்கள், தயவு செய்து பதில் கூறுங்கள் என்று காவல்துறை கெஞ்சி கொண்டிருப்பது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் லக்கிம்பூர் கொலை சம்பவம் குறித்து மாநில அரசும், போலீஸும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஆஷிஷ் மிஷ்ரா வெள்ளிக்கிழமை (நேற்று) நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என சம்மன் அனுப்பியது. ஆனாலும் அவர் ஆஜர் ஆகவில்லை. இதையடுத்து மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் இன்று ஆஜராகியுள்ளார். நீதிமன்றத்தில் ‘விபத்து ஏற்படுத்திய கார் தன்னுடையதுதான் என்றும், ஆனால் அதில் தான் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்