ஆயுஸ் மருத்துவம் பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் புகழாரம்

Sinoj
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (13:44 IST)
ஆயுஸ் மருத்துவம் பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் புகழாரம் சூட்டியுள்ளார்.
 
ஆயுர்வேதார், சித்தா, ஹோமியோபதி, யுனானி உள்ளிட்டவற்றிற்கான AYUSH மருத்துவமனையை தலைநகர் டெல்லியில்  உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில்  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்  இன்று திறந்து வைத்தார். 
 
அப்போது அவர் பேசியதாவது:
 
''AYUSH அமைச்சகத்துட்ன கொரொனா தொற்று காலத்தில் இருந்தே தொடரில் இருக்கிறேன். எனக்கு முதல்முறை கொரொனா தொற்று ஏற்பட்டபோது, பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்துப் பேசினார். AYUSH-ல் இருக்கும் ஒரு வைத்தியரின் எண்ணைக் கொடுத்து பேசும்படி கூறினார். அவர் கூறியதைப் பின்பற்றினேன். 2 வது. 3 வது முறை கொரொனா தொற்று பாதித்தபோது, ஆங்கில மருத்துவம் எடுத்துக்கொள்ளாமலே சரியாகிவிட்டது'' என்று தெரிவித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்