திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (15:10 IST)
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, திருநங்கை ஒருவரை அவரது உடன் பிறந்த சகோதரரே அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நத்தத்தைச் சேர்ந்த சமந்தா என்ற திருநங்கை, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டை விட்டு வெளியேறியிருந்தார். சமீபத்தில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில காணொளிகளை பதிவேற்றியுள்ளார். இந்த காணொளிகளை பார்த்த சமந்தாவின் சகோதரர் அமர்நாத்தின் நண்பர்களும் உறவினர்களும் அவரை கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. 
 
இதனால் ஆத்திரமடைந்த அமர்நாத், தனது சகோதரியை நத்தத்திற்கு வரவழைத்துள்ளார். அப்போது, அங்கு வந்த சமந்தாவை அவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ய முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த சமந்தா, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செயல் சமூகத்தில் பெரும் பரபரப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்