கொரோனா நிவாரணம்: கர்நாடகா மாநிலத்திற்கு ரூ.3 கோடி வழங்கிய சன் டிவி!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (15:01 IST)
கொரோனா நிவாரணம்: கர்நாடகா மாநிலத்திற்கு ரூ.3 கோடி வழங்கிய சன் டிவி!
கர்நாடக மாநில முதல்வரிடம் சன் டிவி ரூபாய் மூன்று கோடி கர்நாடக மாநில கொரோனா நிவாரண நிதியாக வழங்கி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்த கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி கலாநிதி ஆகியோரின் ரூபாய் 10 கோடியை தமிழக அரசு கொரோனா நிவாரண நிதி அளித்தனர். இதுகுறித்த செய்தி புகைப்படங்களுடன் வெளியாகியது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா அவர்களிடம் சன் டிவி குழு இயக்குநர் காவேரி கலாநிதி மாறன் அவர்கள் ரூபாய் மூன்று கோடி காசோலையை வழங்கினார். கொரோனா தடுப்பு பணிகளுக்காக சன் டிவி குழுமம் சார்பில் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படம் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்