இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் பல்வேறு தொழில் அதிபர்கள் திரையுலக பிரபலங்கள் தாராளமாக நிதி உதவி செய்து வருகின்றனர். சற்றுமுன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ரூபாய் 50 லட்சம் கொரோனா நிவாரண நிதியாக அளித்தார்
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கொரோனா நிவாரணப் பணிக்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து சன் டிவி குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி ஆகியோர் ரூபாய் 10 கோடி நிதி வழங்கினார்கள். அப்போது முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது