இன்று ‘தளபதி 65’ பூஜை: சன் டிவி அலுவலகத்தில் ஏற்பாடு என தகவல்!

புதன், 31 மார்ச் 2021 (08:00 IST)
தளபதி விஜய் நடிக்க இருக்கும் 65வது திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது என்பதும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது
 
அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இன்று சன் டிவி அலுவலகத்தில் தளபதி 65 படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும் இந்த பூஜையில் விஜய், பூஜா ஹெக்டே உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த பூஜை குறித்த ஏற்பாடுகள் சன் டிவி அலுவலகத்தில் செய்யப்பட்டு இருப்பதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் பூஜை நடைபெறும் கூறப்படுகிறது. இன்று பூஜை நடைபெறுவது அடுத்து இன்னும் ஓரிரு நாளில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்