பூரி கடற்கரையில் எஸ்.பி.பி.க்கு மணல் சிற்பம்!!

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (10:16 IST)
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு ஒடிசாவில் மணல் சிற்பம் உருவாக்கி புகழஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 
 
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது.  
 
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் கொரோனா சரியான பின்னரும் நேற்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததை எண்ணி அனைவரும் மிகுந்த வேதனை அடைந்துவிட்டனர். 
 
இந்நிலையில் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் நேற்று இரவே கொண்டு செல்லப்பட்டது.   அங்கு 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருக்கும். 
 
அதன் பின்னர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் 11 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்காத பிரபலங்களே இல்லை. நாடு முழுவதும் உள்ள இவரது ரசிகர்கள் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
அந்த வகையில், மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கியுள்ளார் மணல் சிற்ப கலைஞர் சதர்ன் பட்நாய்க். இது தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்