காதல் விவகாரத்தில் மாணவி கழுத்தறுத்து கொலை...

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (18:14 IST)
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கோம் தலயோழபரம்பையில் வசித்து வரும் நிதினா மோலை அவரது கல்லூரி மாணவர் அபிஷேக் பேப்பர்கட்டரை கொண்டு கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கோம் தலயோழபரம்பையில் வசித்து வரும் நிதினா மோல். இவர் பாலநகரில் அமைந்துள்ள செயிண்ட் தாமஸ் கல்லூரியில் படித்து வந்தார். இன்று தேர்வு எழுதுவதற்காக இன்று கல்லூரிக்குச் சென்றார்.

அப்போது, அங்கு நிதினா மோலுடன் படித்து வரும் வள்ளிச்சீராவைச் சேர்ந்த மாணவர் அபிஷேக் இன்று தேர்வு எழுத வந்தார். இருவரும் அங்குள்ள மண்டபத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, வாக்குவாதம் உருவாகி சண்டையாக மாறியது. ஆத்திரமடைந்த அபிஷேக் பேப்பர் கட்டரை எடுத்து நிதினா மோலைக் கழுத்தை அறுத்துவிட்டார்.

உடனே கீழே சரிந்து விழுந்த நிதினாவை சக மாணவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறினர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்