மூன்று மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (07:01 IST)
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து மூன்று மாநிலங்களிலும் முறையே அசோக் கெலாட், கமல்நாத் மற்றும் பூபேஷ் பாகல் முதல்வராக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வராக இன்று காலை 10.15 மணிக்கு அசோக் கெலாட் அவர்களும், மத்தியப்பிரதேச முதல்வராக 1.15-க்கு கமல்நாத் அவர்களும், சத்தீஸ்கர் முதல்வராக 4.30-க்கு பூபேஷ் பாகல் அவர்களும் பதவியேற்க உள்ளனர்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்ளவுள்ள நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நேற்று சென்னையில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல்காந்தி கலந்து கொண்ட நிலையில் இன்று காங்கிரஸ் முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்வதால் இரு கட்சிகளின் கூட்டணி 100% உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்