தென் பாரதமே மிகவும் பெருமை கொள்ளும் நாள் இது: சந்திரபாபு நாயுடு

ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (19:58 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதன் பின்  ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

`தென் பாரதமே மிகவும் பெருமை கொள்ளும் நாள் இது. சென்னை கடல் அலைகள் மகிழ்ச்சி கொள்ளும் தருணம். இந்திய நாட்டின் மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதியின் திரு உருவச் சிலையை சென்னை மாநகரில் திறந்துவைத்துள்ளோம். இப்பெரும் விழாவில் கலந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். எண்பதாண்டு காலம் மக்கள் நல்வாழ்வுக்காகப் பாடுபட்ட பெரும் தலைவர் நமது கருணாநிதி. தமிழகத் திருநாடு போற்றும் அரசியல் தலைவர்.

தமிழகத்தில் திமுகவை வெற்றி பெற செய்து மாற்றத்தை கொண்டு வர வேண்டும். எதிர்கால தமிழ் சமுதாயம் கருணாநிதி செய்த நன்மைகளை என்றென்றும் நினைக்கும். ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க பாடுபட்டவர் கருணாநிதி

தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பிரச்னையை எழுப்புகிறது பாஜக அரசு. பணமதிப்பு நீக்கம் பொதுமக்களுக்கு பலன் தரவில்லை. ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவலை தந்து சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்