மத்திய அரசின் எஸ்.எஸ்.சி தேர்வு தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (08:05 IST)
மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக எஸ்எஸ்சி தேர்வு நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது. இந்த நிலையில் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான  எஸ் எஸ் சி தேர்வு தேதி குறித்து அறிவிப்பு சற்று முன் வெளியாகியுள்ளது. 
 
இதன் படி மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களை நிரப்புவதற்கு பிப்ரவரி 17ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி என்றும் மே 12ஆம் தேதி இந்த தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://ss.nic.in/ என்ற இணையதளத்தில் சென்ற விண்ணப்பம் செய்யலாம் என்றும் இந்த தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்பட பல மொழிகளில் இந்த ஆண்டு எஸ்எஸ்சி தேர்வு எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்