பள்ளி வளாகத்தில் மாணவனுடன் சிறுமி தற்கொலை முயற்சி!

வியாழன், 19 ஜனவரி 2023 (20:33 IST)
உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்சில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் 16 வயது சிறுவன், சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ் கஞ்ச் என்ற பகுதியில் ஒரு பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில்  12 ஆம் வகுப்பு படித்து வரும் 20 வயது மாணவனும், 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்.

அவர்களின் காதலுக்கு இருவர் வீட்டிலும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இவரும் பள்ளி வளாகத்தில் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இவர்களை மீட்ட பள்ளி நிர்வாகிகள் அருகிலுள்ள சமூக சுகாதார மையத்திற்குக் கொண்டு சென்றனர். பின்னர், மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அப்போது, மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சிறுமிக்கு 16 வயது, அவர் சிறுமி என்பதால் பெற்றோர் இத்திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்