கல்லூரி மாணவிகளுக்கு பேறுகால விடுமுறை ஆறு மாதங்கள் விடுக்கப்படும் என கேரள பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
சர்வதேச மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட இருப்பதை அடுத்து கேரளாவில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாணவிகள் கர்ப்பமானால் அவர்களுக்கு ஆறு மாத காலம் பேறுகால விடுமுறை அளிக்கப்படும் என கேரள பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகப்பேறு விடுப்பு முடிந்து கல்லூரிய்யில் சேரும்போது மருத்துவ சான்றிதழை கண்டிப்பாக மாணவிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த சான்றிதழ்களை கல்லூரி முதல்வர்கள் சரி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
ஏற்கனவே கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்க கேரள பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது என்பது தெரிந்ததே.