வாரத்தின் முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி: சென்செக்ஸ் 260 புள்ளிகள் வீழ்ச்சி!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (09:39 IST)
கடந்த வாரம் முழுவதும் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் உயர்ந்து வந்ததால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை பெற்ற நிலையில் தற்போது திடீரென பங்கு சந்தையில் வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்து இருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
 
இன்று காலை 9 மணிக்கு பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் தற்போது சுமார் 300 புள்ளிகளுக்கும் அதிகமாக பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்செக்ஸ் 
தற்போது 55 ஆயிரத்து 780 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது
 
 அதே போல் நிற்கும் என்பது புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 640 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நிப்டி 55 புள்ளிகள் சரிந்து 16663 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது.
 
வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்து இருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வாரம் பங்குச்சந்தையில் ஏற்றம் ஏற்படும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்