மூன்று நாள் உயர்வுக்கு பின் இன்று பங்குச்சந்தை சரிவு!

வியாழன், 21 ஜூலை 2022 (09:26 IST)
இந்த வாரம் முதல் மூன்று நாட்கள் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்த நிலையில் இன்று சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இருப்பினும் குறைந்த அளவு சரிந்துள்ளதால் மதியத்திற்கு மேல் பங்கு சந்தை உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது 
 
இந்திய பங்குச் சந்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வீழ்ச்சி அடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது
 
குறிப்பாக கடந்த மூன்று நாட்கள் பங்குச் சந்தை உயர்ந்துள்ளதால் ஏராளமான நஷ்டத்தை முதலீட்டாளர்கள் மீட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தைக்கு தொடங்கியதிலிருந்து சிறிய அளவில் சரிந்துள்ளது. சென்செக்ஸ் வெறும் 30 புள்ளிகள் மற்றும் சரிந்து 55 ஆயிரத்து 363 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் நிஃப்டி வெறும் 7 புள்ளிகள் மட்டுமே சரிந்து 16514 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்