பகோடா விற்பதும் வேலைவாய்ப்புதான்; மோடியை வைத்து எடுத்துக்காட்டு கூறும் அமித் ஷா

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (19:13 IST)
பகோடா விற்பனை செய்வதும் வேலைவாய்ப்புதான் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
பிரதமர் மோடி பகோடா விற்பனை செய்வதும் வேலைவாய்ப்புதான் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
 
இதைத்தொடர்ந்து பகோடா விற்பதும் வேலைவாய்ப்பு என்று சொல்லும் பாஜக், பிச்சை எடுப்பதையும் வேலைவாய்ப்பு என சொல்லக் கூடும் பா.சிதம்பரம் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இதுதொடர்பாக இன்று ராஜ்யசபாவில் விவாதம் நடைபெற்றது. அதில் அமித் ஷா கூறியது மோடிக்கு கூறியதை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. அவர் கூறியதாவது:-
 
நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறோம். நாட்டில் பகோடா விற்பனை செய்வது கூட வேலைவாய்ப்புதான். டீ விற்றவர் மோடி நாட்டின் பிரதமரானார். அதேபோல் பகோடா விற்பாவரின் மகன் நாளை பெரிய தொழிலதிபராக முடியும் என்று கூறினார்.
 
அமித் ஷாவின் இந்த கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்