நடிகையும், முன்னால் காங்கிரஸ் எம்.பி.யுமான திவ்யா ஸ்பந்தனா டுவிட்டரில் மோடியை கேலி செய்து வெளியிட்ட கருத்து மிகவும் வைரலானது.
கர்நாடகாவில் நேற்று நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் மோடி, எப்போதும் பழங்கள், காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். தக்காளி, வெங்காயம், உருளை சாகுபடிக்கு ‘டாப்’ முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறிருந்தார்.
மோடி பேசிய ‘டாப்’ என்ற வார்த்தையை ‘போட்’ என மாற்றி திவ்யா, ''போதையில் இருக்கும் போது பேசினால் இப்படித்தான் நடக்கும்'' என்று டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் மோடி குறித்து கிண்டாலாக பேசிய திவ்யா மீது ராகுல் காந்தி நடவடிக்கை எடுப்பாரா என பாஜக சமூகவலைத்தள குழுவை சேர்ந்த அமித் மால்வியா கேள்வி எழுப்பியுள்ளார்.