‘அப்பா’ இல்லாத மகனுக்கு ’அட்மிஷன் ’ மறுத்த பள்ளி ! வைரல் வீடியோ

Webdunia
ஞாயிறு, 16 ஜூன் 2019 (12:15 IST)
அப்பா இல்லை என்பதற்க்காக 2ம் வகுப்பு மாணவனுக்கு பள்ளியில் அட்மிஷன் மறுக்கப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் வாஷி பகுதியில் வசிப்பவர் சுஜாதா மோஹிட். இவரது கணவர் இறந்துவிட்டார். இவரது மகன் ஒன்றாம் வகுப்பு முடித நிலையில்,  வாஷியில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் இரண்டாம் வகுப்பில்  சேர்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பள்ளியின் பிரின்சிபல் தந்தையில்லை என்பற்காக மாணவனுக்கு அட்மிஷன் வழங்க மறுத்துள்ளார்.
 
பின்னர், சுஜாதா: ஒருவேளை பெற்றோர் ஒன்றாக வந்து அட்மிஷன் பெற்று பின்னர் விவாகரத்து பெற்றால் என்னசெய்வீர்கள் என்று பிரின்சிபலிடம் கேட்டுள்ளார்.அதற்கு, பிரின்சிபல்: அப்படி நடந்தால் அது துரதிஷ்டம் அந்த குழந்தையின் சேர்க்கை ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்.
 
இவர்கள் இருவரும் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதங்களை எழுப்பி வருகின்றது. பள்ளிக்கு எதிராகவும் கடும் கண்டனங்கள் எழுகிறது.
 
இதுகுறித்து சுஜாதா கூறியதாவது ; வேறு ஒருபள்ளியில் சேர்தால் என் மகனுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால்தன் இப்பள்ளியில் சேர்க்க முடிவெடுத்தேன். முதலில் அட்மிஷன் இல்லையென்றவர்கள்,மீண்டுமெனக்கு போன் செய்து சீட் உள்ளது என்றனர். ஆனால் அங்கு சென்றபோது தந்தை இல்லை என்பதற்காக சீட் தர மறுத்தனர். அதனால்தான் பள்ளியில் பிரின்சிபல் பேசுவதை ரெக்கார்ட் செய்தேன் என்று தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்