லண்டனில் பேல் பூரி விற்கும் பிரிட்டிஷ்காரர் ... சூப்பர் வைரல் வீடியோ

சனி, 15 ஜூன் 2019 (20:46 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.  நம் இந்திய அணி, இங்கிலாந்து அணி  உள்பட பல்வேறு நாட்டு அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன.  ஏராளமான ரசிகர்கள் இந்தப் போட்டியைப் பார்த்துவருகின்றனர்.
இந்நிலையில்  இந்த கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் ஓவல் மைதானத்திற்கு வெளியே ஆங்கிலேயர் ஒருவர் நம்மூரில் சாலையில் போட்டு விற்பனை செய்யப்படும் பேல்பூரியை தயார் செய்வதை வீடியோ எடுத்து அதை சமூக வலைதளமானடுவிட்டரில்  @JaniJasmine  என்ற கணக்கில் பதிவிட்டிருந்தார்.
 
தற்போது இந்த வீடியோ பயங்கர வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவிற்கு இதுவரையில் 2000 -ற்கும் மேற்பட்டோர் ரீடிவீட் செய்துள்ளார்கள். 10 ஆயிரத்துக்கும் மேலானோர் லைக் செய்துள்ளார்கள்.
 
மேலும் இந்த வீடியோவில் உள்ளவர் அதில் பேசும் போது தனது பெயர் டீனால் என்றும், தன்னை லண்டன் சாலைகளில் காணலாம் என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த வீடியோவை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஷேர் செய்திருக்கிறார்.
 

bhery bhel done

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்