அருட்பிரகாச வள்ளலாரின் ஆன்மிக கருத்துகள்

புதன், 12 ஜூன் 2019 (14:08 IST)
தமிழ் நாட்டில் பெரியார் காலத்துக்கு முந்தையவரான வள்ளலார் ஆன்மீகவாதியாய், கடவுளை ஜோதி வடிவத்தில் காண்பவராய் , வைதீக மதத்துக்கு மாற்றைக்  கொண்டு வந்தவர். ஜாதிவெறியைத் தாண்டி, ஞானநெறியையே மையப்படுத்திடுவோம் என்னும் செய்தி கொண்டுவந்தவர்.
பெரியவர்களைக் கண்டால், பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். தவறு செய்தால், அதைத் திருத்திக்கொள்ள முயலுங்கள். நற்குணங்களைப் பின்பற்றி  நல்லவர்களாக வாழுங்கள். ஏழைகளின் பசிப்பிணி போக்குவதே ஜீவகாருண்யம். இந்த ஒழுக்கம் ஒன்றே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
 
பிறருடைய பசியைப் போக்குவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிந்துவிடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களைக் களையவும்  ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
 
யாரிடத்தில் தயவு அதிகரிக்கப்பட்டிருக்கிறதோ அவரிடத்தில் கடவுள் இருக்கிறார். பகை இல்லாத ஒருவனே அமைதியாக வாழமுடியும். அன்பு வாழவைக்கும். ஆசை தாழவைக்கும். எல்லா உயிர்களும் இறைவனுடைய கோயில்கள். அருள், அறம், அன்பு. உண்மை உடையவனே வாழ்க்கையில் இன்பம் பெறுகிறான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்