அதானி குழுமத்திற்கு கடன் வழங்கிய வங்கிகள்.. எஸ்பிஐ தான் டாப்..!

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (16:48 IST)
அதானி குழுமத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் மிக வேகமாக சரிந்து வரும் நிலையில் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட கடன் தொகை எவ்வளவு என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
 
இந்த நிலையில் இந்திய வங்கிகள் அதானி குழுமத்திற்கு வழங்கிய கடன்கள் குறித்த தொகையை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் அதானி குழுமத்திற்கு அதிகமாக கடன் கொடுத்த வங்கி பாரத ஸ்டேட் வங்கி என்பது தெரிய வந்துள்ளது. அதானி குழுமத்தின் நிறுவனங்களுக்கு ரூபாய் 21,375 கோடி கடன் எஸ்பிஐ கொடுத்துள்ளது 
 
இரண்டாவதான இண்டஸ் இண்ட் வங்கி ரூ.14,500 கோடி கடன் கொடுத்துள்ளதாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7000 கோடி கடன் கொடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இன்னும் எந்தெந்த நிறுவனங்கள் அதானி குழுமத்திற்கு கடன் வழங்கியுள்ளன என்பதை குறித்த விவரங்கள் இன்னும் சில மணி நேரத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட கடன் மற்றும் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்