நாங்க பாகிஸ்தானியர்கள் இல்ல.. இந்தியாவோடு நட்பு கொள்ள விரும்பும் பலுசிஸ்தான்!

Prasanth Karthick

வியாழன், 15 மே 2025 (09:15 IST)

இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீபத்தில் போர் மூண்ட நிலையில், இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்த பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தலைவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவு வைரலாகியுள்ளது.

 

பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்து இந்தியா போர் நடத்தி வரும் நிலையில், மறுபக்கம் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை கேட்டு பலுசிஸ்தான் கிளர்ச்சி படைகள் பாகிஸ்தான் மீது அவ்வபோது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று இந்தியாவுக்கு ஆதரவாக பலூச் விடுதலைப்படை அமைப்பின் தலைவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அதில் அவர் “ஆகஸ்ட் 11, 1947ல் பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறியபோதே எங்கள் விடுதலையை நாங்கள் அறிவித்துவிட்டோம். இந்திய ஊடகங்களும், யுட்யூபர்களும் பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணம் என குறிப்பிட வேண்டாம். நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல. பலுசிஸ்தானை குடியரசாக உலகம் அங்கீகரிக்க வேண்டும். பலுசிஸ்தான் தூதரகத்தை டெல்லியில் அமைக்க இந்தியா அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கைகள் வைத்துள்ளார்.

 

இந்தியாவுடன் தாங்கள் நட்புக் கொள்ள விரும்புவதாக கூறி பலுச்சை சேர்ந்தவர்கள் பதாகை ஏந்தி நிற்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்