புல்வாமாவில் தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு.. பகல்காம் தாக்குதல் நடத்தியவர்களா?

Siva

வியாழன், 15 மே 2025 (08:52 IST)
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா என்ற பகுதியில், இந்திய ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசாரால் தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும், இரு தரப்புக்கும் இடையே தற்போது துப்பாக்கி சண்டை நடந்து வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
புல்வாமா பகுதியில் ஒரு முக்கிய இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உள்ளூர் காவல் நிலையத்திற்கு உளவுத்துறையிலிருந்து  தகவல் வந்தது. அதன் பின்னர் உடனடியாக இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.
 
தீவிரவாதிகள் அந்த பகுதியிலிருந்து வெளியே செல்ல முடியாத வகையில் அனைத்து பாதைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, தீவிரவாதிகள் தரப்பிலிருந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகவும், அதற்கு பதிலாக இந்திய ராணுவமும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இது குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது சுற்றிவளைக்கப்பட்ட தீவிரவாதிகள், சமிபத்தில்  நடந்த பகல்காம் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் இருக்கக்கூடும் என கூறப்படுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்