திருப்பதி கோவிலில் ஒவ்வொரு மாதமும் கோடி கணக்கில் காணிக்கை கிடைத்து வரும் நிலையில் ஏப்ரல் மாத காணிக்கை மற்றும் 100 கோடி ரூபாயை தாண்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பணக்கார கோயில்களில் ஒன்று என்று கூறப்படும் திருப்பதி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள் என்றும் லட்சக்கணக்கில் பக்தர்கள் காணிக்கை அளித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்தது.
அந்த வகையில் ஏப்ரல் மாத காணிக்கை எண்ணப்பட்ட நிலையில் தற்போது 101.63 கோடி ரூபாய் ஏப்ரல் மாதத்தில் மட்டும் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20.17 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும் பக்தர்களுக்கு 94.22 லட்சம் லட்டுக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் காணிக்கை தெரிவித்துள்ளது.