சென்னை - திருப்பதி இடையே வந்தே மெட்ரோ ரயில்.. சோதனை ஓட்டம் ஆரம்பம்..!

Siva

ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (07:43 IST)
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக இயக்கப்படும் நிலையில் அடுத்த கட்டமாக வந்தே மெட்ரோ ரயில் இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அந்த வகையில் வந்தே மெட்ரோ ரயில் இயங்கக்கூடிய வழித்தடங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதில் சென்னை - திருப்பதி வழித்தடமும் இருப்பதாக கூறப்படுகிறது.

வந்தே மெட்ரோ ரயில் மூலம் 124 முக்கிய நகரங்களை இணைக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ள நிலையில் அதில் லக்னோ - கான்பூர், ஆக்ரா - மதுரா, டெல்லி, - ரிவாரி, புவனேஸ்வர் -பாலசோர், திருப்பதி - சென்னை ஆகிய வழி தடங்களும் உள்ளன

இந்த ரயில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என்றும் 12 பெட்டிகள் முதல் 16 பெட்டிகள் வரை இந்த ரயிலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் முன்பதிவு செய்யாத பயணிகளும் இதில் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் ரயில் முழுவதும் ஏசி வசதி செய்யப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்