பாஜக கூட்டணியில் இணைந்த ராஷ்டிரிய லோக் தளம்

Sinoj
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (18:15 IST)
ஜெயந்தி செளரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால்  நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  பாஜகவுடன் கூட்டணி வைக்க ஆந்திராவில்  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும், தெலுங்கு தேசம் கட்சியும் போட்டியிட்டு வருகின்றன.

சமீபத்தில், பீகார் முதல்வர் நிதிஸ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்து மீண்டும் முதல்வரானார்.

இந்த நிலையில்,  இந்தியா கூட்டணியில் உத்தரபிரதேசம் மா நிலத்தின் ராஷ்டிரிய லோக் தளம் என்ற கட்சி விலகியுள்ளது. ஜெயந்தி செளரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், அக்கட்சிக்கு மக்களவை தேர்தலில் 2 இடம்  மாநிலங்களவையில் 1 இடம்  ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்