மாநிலங்களவைத் துணைத்தலைவர் பதவிக்கு லாலு கட்சி எம்பி மனுதாக்கல்
மாநிலங்களவை துணைத் தலைவர் பதவி நீண்ட நாட்களாக காலியாக இருப்பதாகவும் அந்த பதவிக்கு நியமனம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்ததை அடுத்து தற்போது மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது
மாநிலங்களவை துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதற்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் சோனியா காந்தி ஒப்புதல் பெற்று விட்டதாகவும் செய்திகள் வெளியானது
எனவே திமுக எம்பி திருச்சி சிவா இந்த பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதள எம்பி மனுதாக்கல் செய்துள்ளார்
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஷா என்பவர் சற்று முன்னர் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அப்படி என்றால் திருச்சி சிவா இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட மாட்டாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. முன்னதாக இந்த பதவி தேவையில்லை என திமுக தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது