உபி முதல்வரின் காலில் விழுந்த சத்திஷ்கர் முதல்வர்! ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (21:44 IST)
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களில் காலில் அவரை விட சுமார் 20 வயது அதிகமான சத்திஷ்கர் முதல்வர் ரமன்சிங் விழுந்து வணங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் வரும் நவம்பர் 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் முதல்வர் வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் ரமன்சிங் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களும் சென்றிருந்தார். இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்தவுடன் தான் வெற்றி பெற ஆசிர்வதிக்கும்படி யோகி காலில் ரமன்சிங் திடீரென விழுந்து வணங்கியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சத்திஷ்கர் முதல்வர் ரமன்சிங் அவர்களுக்கு 66 வயது ஆகின்றது. ஆனால் யோகிக்கு 46 வயது மட்டுமே ஆகின்றது. இருப்பினும் காவி உடையில் சாமியார் போல் யோகி வலம் வருவதால் அவருடைய காலில் விழுந்து ரமன்சிங் ஆசி பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி யோகி ஆதித்யநாத் முதல்வராவதற்கு முன், கோரக்நாத் கோவிலின் தலைமை பூசாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்