தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய போது, "கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
இந்த சந்திப்பின் போது, நிருபர்களிடம் அவர் பேசிய போது, "கவர்னருக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை கொண்டாடவே வந்தேன். தமிழக அரசு போட்ட வழக்கில் வெற்றி கிடைத்துள்ளது. அதனால், அந்த கொண்டாட்டத்திற்கு நான் வந்து முதலமைச்சரை சந்தித்தேன்" என்றார்.
"தேசிய அளவில் இந்த வெற்றி மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் இந்த வெற்றியை மிகப்பெரிய அளவில் கொண்டாட வேண்டும். மேலும் தொகுதி சீரமப்பு குறித்தோ, மேல் சபை எம்.பி குறித்தோ பேச வரவில்லை. அதற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது" என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.