சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இன்று மாலைக்கான வானிலை எச்சரிக்கை..!

Siva

புதன், 16 ஏப்ரல் 2025 (14:03 IST)
சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இன்று மாலை லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,
 
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், கோவை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனை அடுத்து, மேற்கண்ட 15 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
ஏற்கனவே சற்று முன்தான் சென்னையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்