மெஜாரிட்டி கிடைத்தால் ராகுல்காந்தி, கூட்டணி ஆட்சி என்றால் ப.சிதம்பரம்: காங்கிரஸின் பிரதமர் திட்டம்!

Webdunia
புதன், 22 மே 2019 (21:01 IST)
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்தால் ராகுல்காந்தி பிரதமர் என்றும் கூட்டணி கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைத்தால் ப.சிதம்பரம் தான் பிரதமர் வேட்பாளர் என்றும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
இதுவரை வெளியான எந்த கருத்துக்கணிப்பிலும் காங்கிரஸ் கட்சி தனித்தோ அல்லது கூட்டணி கட்சியுடன் இணைந்தோ ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கவில்லை. இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் தலைமை இந்த தேர்தலில் நல்ல வெற்றி கிடைக்கும் என  மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.
 
இந்த நிலையில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ராகுல்காந்தி தான் பிரதமர் என்றும், சுமார் 100 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று மாநில கட்சிகளின் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால் ப.சிதம்பரம் அவர்களை பிரதமர் ஆக்கவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாம். மேலும் மன்மோகன்சிங், குலாம் நபி ஆசாத், சந்திரபாபு நாயுடு ஆகியோர்களும் பெயர்களும் பிரதமர் பதவி பட்டியலில் உள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்