எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல்காந்தி.. காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தகவல்..!

Siva
வியாழன், 6 ஜூன் 2024 (14:33 IST)
மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் பலம் வாய்ந்த எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது
 
ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக வேண்டுமென, காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக கூறப்பட்டாலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கோரிக்கையை ராகுல் காந்தி ஏற்பாரா? அல்லது மூத்த தலைவர்கள் யாரேனும் தேர்வு செய்யப்படுவார்களா? என கேள்வி எழுந்துள்ளது
 
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது கேபினட் அமைச்சர் பதவி அந்தஸ்துக்கு இணையானது என்பதால் அந்த பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 
தேர்தல் ஆணையர் தேர்வு, ஊழல் கண்காணிப்பு ஆணையர் தேர்வு உள்ளிட்டவற்றில் எதிர்க்கட்சித் தலைவரின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ராகுல் காந்தி தான் அந்த பதவிக்கு பொருத்தமானவர் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்