ரெய்பரேலியா? வயநாடா? அதை சொன்னா மோடி உஷாராயிடுவார்! – ராகுல் காந்தியின் சீக்ரெட் திட்டம்!

Prasanth Karthick

செவ்வாய், 4 ஜூன் 2024 (18:22 IST)
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ராகுல்காந்தி தான் போட்டியிட்ட வயநாடு, ரெய்பரேலி இரண்டு தொகுதிகளிலுமே வென்றுள்ள நிலையில் எந்த தொகுதியில் நீடிக்கப் போகிறார் என்பதை ரகசியமாக வைத்துள்ளார்.



இந்தியா முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதலாக வெளியாகி வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணி 232 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மைக்கு நெருங்கியுள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சியமைக்க உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி தான் போட்டியிட்ட ரெய்பரேலி மற்றும் கேரளாவின் வயநாடு இரண்டு தொகுதிகளிலுமே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். அரசியலமைப்பின்படி ஒரு நபர் ஒரு தொகுதிக்கு மட்டுமே எம்.பியாக செயல்பட முடியும். இந்நிலையில் அவர் கடந்த தேர்தலில் வென்று எம்.பியாக இருந்த வயநாடு தொகுதியிலேயே நீடிப்பாரா அல்லது காங்கிரஸின் என்றென்றும் வெற்றி தரும் கோட்டையான ரெய்பரேலியில் எம்.பியாக ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல்காந்தி, இப்போதைக்கு இதுகுறித்த விவரங்களை வெளியிடப்போவதில்லை என்றும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் கூறினார். “எந்த தொகுதியை கைவிடுகிறோம் என தெரிந்தால் பிரதமர் மோடி உஷாராகிவிடுவார் என்பதால் ரகசியமாக தொடர்கிறோம்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்