மேட் இன் சீனா தான் புதிய இந்தியாவா? ராகுல்காந்தி கேள்வி

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (12:21 IST)
மேட் இன் சைனா தான் புதிய இந்தியாவா? என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடியின் ஐதராபாத்தில் பிரம்மாண்டமான ராமானுஜர் சிலையை திறந்து வைத்தார். இந்த சிலை தற்போது சீனாவில் தயாரிக்கப்பட்டு உள்ளது என்று செய்தி வெளியானதை அடுத்து இது குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் 
 
சமத்துவத்திற்கான சிலை என்ற சிலையை சீனா தான் தயாரித்துள்ளது என்று தெரியவந்துள்ளது. சீன சார்பு தான் புதிய இந்தியாவா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்
 
சீனாவில் தயாரிக்கப்பட்டதை வைத்துக்கொண்டு நாம் புதிய இந்தியா என்று பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். பரதமர் மோடி சமீபத்தில் திறந்துவைத்த ராமானுஜர் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டது என்ற தகவல் தற்போது இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்