மகளிர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி!

புதன், 9 பிப்ரவரி 2022 (08:49 IST)
மகளிர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி!
இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 20 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 
 
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து பயணம் செய்துள்ள நிலையில் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது
 
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது 
 
இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது 
 
இந்தநிலையில் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்