இந்தியா முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் மேலும் இரண்டு வாரங்களுக்கு அதை நீட்டித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது பின்னர் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது ஊரடங்கு முடிய இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் மேலும் நீட்டிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஞ்சாப்பில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப்பில் இதுவரை 322 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 71 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருந்தாலும் ஊரடங்கு இன்னும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை திறக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.