பொதுமக்கள் ஒத்துழைத்தால்தான் கொரோனா ஒழியும்! – முதல்வர் கவலை!

செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (11:59 IST)
கொரோனா ஊரடங்கு காலம் முடிவடைய உள்ள சூழலில் மக்கள் போதிய விழிப்புணர்வு இன்றி செயல்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து பேசியுள்ள முதல்வர் “கொரோனா தடுப்பு பணிகளில் அதிகாரிகளின் செயல்பாடு பாராட்டத்தக்கது. கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு புரியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள். இத்தாலி, அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே முழுவதுமாக கொரோனாவை ஒழிக்க முடியும்.” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்