மீடூ விவகாரம் - நடிகர் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு...

சனி, 27 அக்டோபர் 2018 (16:38 IST)
நடிகை ஸ்ருதி ஹரிகரன் கொடுத்த மீடூ புகாரின் கீழ் போலீஸார் நஃடிகர் அர்ஜூன் மீது நவடிக்கை.சில நாட்களுக்கு முன் ஸ்ருதிஹரிஹரன் தனக்கு  அர்ஜுர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மீடூ வில் பதிவிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து நடிகர் அர்ஜூன் தரப்பில் இது மோசடி என்றும் அவருக்கு பின்புலமாக யரோ இருந்து வழிநடத்துகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இனிமேலும் இதுமாதிரி அவதூறு பரப்பினால் ஸ்ருதி மீது மானநஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடருவேன் என அர்ஜூன் கூறியிருந்தார்.
 
அதனைதொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் தன் அப்பா எந்த பப்புகளுக்கும் செல்லும் பழக்கம் இல்லை எனக்கூறி ஸ்ருதிக்கு பதிலடி கொடுத்தார்.
 
இது நடந்து சில நாட்களுக்கு பிறகு நடிகர் பிரகாஷ்ராஜ் அர்ஜூன் ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில் மீடூ சம்பந்தமாக பல பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இன்று நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளின் கீழ் பெங்களூரு காவல் துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
விஸ்மயா திரைப்படத்தில்நடித்த போது தமக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக  அர்ஜூன் மீது ஸ்ருதி புகார் கூறியதையடுத்து போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாலியல் ரீதியான துன்புறுத்தல் உள்ளிட்ட354ஏ,506,509.354ஆகியு பிரிவுகளில் கீழ் நடிகர் அர்ஜூன் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்