டெல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (20:14 IST)
டெல்லியில்  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், ஜி20 மாநாட்டால் டெல்லி மக்கள் நிறைய சிரமங்களை சந்திக்க  நேரலாம் என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி டெல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அதில், ''ஜி20 மா நாட்டிற்காக போக்குவரத்து விதிகள் மாற்றம் செய்யப்படலாம். நீங்கள் செல்ல விரும்பும் பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் போகலாம் அதற்கான நான் முங்கூடியே உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்…. ஏனென்றால் மா நாட்டிற்கு வருபவர்கள் நம் விருந்தினர்கள், நாட்டின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என டெல்லி மக்கள் உறுதி செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

ஜி20  உச்சி மாநாடு உலகில் உள்ள முக்கிய தலைவர்களின் முக்கிய சந்திப்பு ஆகும். இதில், 19 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள்  ஒன்றுகூடி, உலகளாவிய நிதிதொடர்பான விவகாரங்கள் எப்படி கையாள்வது என்பது பற்றி விவாதித்து, ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான  டெல்லியில் உள்ள அனைத்து வங்கிகள், அலுவலகங்கள் செப்டம்பர் 8 முதல் 10 ஆம் தேதி வரை மூடப்பட்டும் எனவும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த  பள்ளி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்